படித்ததில் சிரித்தது
புருஷன் தன பொண்டாட்டி திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டா என்பதால் ஆஸ்பித்திரிக்கு கூட்டிட்டு போய் எமெர்ஜென்சி வார்டுல அட்மிட் பண்ணினான்.
ஆபரேஷன் தியேட்டருல ட்ரீட்மென்ட் நடந்துட்டு இருந்துச்சி. புருஷன் வெளிய உக்காந்து இருந்தான்.
கொஞ்ச நேரம் கழிச்சி வெளியே வந்த டாக்டர் அட்டெண்டரை பாத்து, 'ஸ்பேனர் இருந்தா சீக்கிரம் எடுத்துட்டு வா' என்று கத்தினார்.
அட்டெண்டர் கொண்டு போய் கொடுத்துட்டு வந்தான்.
மறுபடியும் டாக்டர் வெளியே வந்து, ' ஸ்க்ருடிரைவர் இருந்தா சீக்கிரம் கொண்டு வா' என்று கத்தியதும் அட்டெண்டர் கொண்டு போய் கொடுத்தான்.
புருஷன், 'எதுக்கு டாக்டர் ஸ்பேனர், ஸ்க்ரு டிரைவர் எல்லாம் கேக்குறார், என்ன பண்றாங்கன்னு புரியலியே' என்று தவித்து போனான்.
கொஞ்ச நேரம் கழித்து டாக்டர் வந்து, 'அந்த பெரிய சுத்திய எடுத்துட்டு வா' என்று கத்தியதும் புருஷன் பயந்து போய் டாக்டரிடம் கேட்டான்.
புருஷன்:- என்ன டாக்டர், ஸ்பேனர், ஸ்க்ருடிரைவர், இப்போ சுத்தி எல்லாம் கேக்றீங்க..உள்ள ஆப்பரேஷன் தானே பண்றீங்க..இல்ல வேற எதாச்சுமா..
டாக்டர்:- ஆபரேஷன் தான் செய்யணும்..ஆபரேஷனுக்கு தேவையான கத்தி, சிஸ்சர் எல்லாம் வச்சிருக்கிற பெட்டியோட பூட்டு சாவி காணாமல் போய்டுச்சி..அதான் பெட்டிய திறக்க முயற்சி பண்ணோம்.. முடியல.. கடைசியா பூட்டை உடைக்கலாம்னு இருக்கோம்..