நாளை அது இனிப்பு

இன்றைக்குப் போதுமென
இன்னுமுள்ள மீதமதை
நாளைக்காய் வேண்டுமென
நானிலத்தார் இருத்துகிறார்

இன்றைக்கே இல்லாதோர்
இன்னுமிங்கு இருக்கின்றார்
நாளையது வரட்டுமென
நாளதனைப் பார்த்திருப்பார்

இருவருக்கும் நாளையென்று
இருக்கிறது நம்பிக்கை
இதுமட்டும் இல்லையெனில்
இனிப்பேது இருப்பதனில்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (27-Dec-14, 10:50 am)
பார்வை : 86

மேலே