கொஞ்சம் கொஞ்சமாய் நிறைய கேள்விகள் - 01 - மகிழினி
அடிப்படை தேவைகள் என்றால் என்ன? பள்ளியில் ஆசிரியர் இப்படி ஒரு கேள்வி கேட்கிறார்...
மாணவன் ஒருவன் எழுந்து உணவு, உடை, இருப்பிடம் ...... இன்னொன்றும் இருக்கிறது கல்வி ......
நேற்றைய கேள்விகளுக்கு தோழமைகளிடம் இருந்த வந்த பதில்களை கொண்டே இன்றைய கேள்விகள் தொடங்கட்டும் .......
நேற்றைய கல்விகள் அறிவை தேடிய பயணமாக இருந்தது ... ஆனால் இன்றைய corporate மயமாக்கப்பட்ட இந்தியாவில் கல்வியும் ஒரு வியாபாரமாக பார்க்கப்படுகிறது..... நிறைய பணம் கொடுத்து நாம் பெற்றுக்கொள்வது வெறும் 1200 க்கான மதிப்பெண்களை தான் .....
இங்கே வியபாரப்பொருள் எனப்படுவது கல்வியா ? இல்லை நம்முடைய அறிவீனமா ?
எல்லா விடுமுறை நாட்களும் கழிந்த பின் சுமார் 8 மாதங்கள் கணக்கிற்கு கல்வி கற்பிக்கப்படுகிறது .... ஆனால் என்ன கற்பிக்கப்படுகிறது என்றால் மதிப்பெண்கள் எப்படி பெறலாம் என்பதே !
பாட புத்தகங்கள் தவிர நம் பிள்ளைகள் இப்போதைய காலத்தில் வேற எந்த வித புத்தகங்களும் படிப்பதில்லை ......
லட்சம் லட்சமாய் பணம் புழங்கும் இன்றைய பெரும் பள்ளிக்கூடங்களில் நூலகம் என்ற ஒன்று இருப்பதே இல்லை..... உலக விடயங்கள் என்ன என்ன என்று அறிய யாரும் செய்திகள் படிப்பதில்லை....
ஆகவே படிப்பு என்பது பாடப் புத்தகத்தில் உள்ள வரிகள் மட்டும் தானா?
பொழுதுபோக்கிற்காக கூட நூலகம் பக்கம் யாரும் எட்டிப்பார்பதில்லை..... எனக்கு தெரிந்த நிறைய மாணவர்களுக்கு பொழுதுபோக்கும் கூத்தாடியாக இருப்பவர்கள் விஜய், சூரியாவும், சாருக் , சல்மான் கானும் தான் .... அதீதமான பொழுது போக்கு என்பது சச்சினும் தோனியும் தான் ....... இதில் தவறு ஏதும் இல்லை , ஆனால் எல்லாம் சரியாக இருக்கிறதா ?
ஐஸ்வர்யா ராய் பற்றி தெரிந்த யாருக்கும் அருந்ததி ராய் இருப்பது தெரியாததும் , சேவாக் பற்றி தெரிந்திருப்போருக்கு சே குவேரா பற்றி தெரியாமல் இருப்பதிற்க்கும், ரபெல் நடால் பற்றி அதிகம் யோசிக்கும் பிள்ளைகளுக்கு நம்மாழ்வார் பற்றி தெரியாததற்க்கும் யார் தான் காரணம்?
நம்முடைய சமூகம் விவசாயத்தை பெரிதும் நம்பி வாழ்ந்த , வாழும் ஒரு இயற்க்கை சமூகம் தான்.. இந்த சமூகத்தில் வளரும் பிள்ளைகளுக்கு ஒரு விதையிலிருந்து ஒரு செடி எப்படி வளருகிறது என்பதை கூட you tube இல் வீடியோவாகத்தான் காண்பித்து பாடம் நடத்தப்படுகிறது e - class என்ற பெயரில்...... எந்த ஒரு ஆசிரியரும் இல்லை பள்ளியும் குழந்தைகளை ஒரு வயலுக்கு அழைத்து சென்று குடியானவர்களை நேரில் காண்பித்து இது தான் இது என விளக்குவதில்லை .......
இங்கே அறிவியல் வளர்ச்சியென கருத்தப்படும் e - class என்பது மாணவர்களை அறிவியல் சிந்தனை கொண்டவர்களாக வளர்க்கிறதா இல்லை reality என்கிற உண்மைக்கு எட்டாத தூரத்தில் புரியாத வழியில் மாணவனை பயணிக்க வைக்கிறதா?
இன்னும் நிறைய கேள்விகள் உண்டு ......
தொடருகிறேன் .........