புத்தாண்டு உதயம்

புதிய உதயம்
புத்தாண்டு அருணோதயம் !
பழைய நினைவுகள்
புதைக்கப்பட்டு ,
புதிய நினைவுகள் உதயமாகின்றது ..........
பழையன கழிந்து ,
புதியன புகும் காலம் இது .......
விரட்டு கவுரங்களும் வீண் பெருமைகளும்
விரட்டி அடிக்கும் காலம் இது .....
கசப்புகள் கனியாக
வேண்டிய நேரம் இது .....
பகைமைகள் நட்பாக
வேண்டிய காலம் இது '''''''
புதிய ஆடை அல்ல
புதிய இதயம் அணிவதுதான் புத்தாண்டு
அப்போதுதான் உதயம்
உண்டாகும் உன் வாழ்வில் ............
அருணோதயம் பிறக்கும்
உன் உள்ளத்தில் ..........