வேர்கள்

தழைக்கும் விழுதுகள் ஊன்றிடும் ​
ஆலமரத்திற்கும் வேர்கள் உண்டு !
மிதித்தால் நிலை கவிழ்ந்திடும்
புற்களுககும் வேர்கள் உண்டு !

தலைமுறை விரிந்திட பிறந்திடும்
மனிதருக்கும் வேர்கள் உண்டு !
தரணிதனில் புகழ்கொடி நாட்டிடும்
தமிழ்மொழிக்கும் வேர்கள் உண்டு !

அசைக்க இயலா கொள்கைக்கும்
அடிநெஞ்சில் வேர்கள் உண்டு !
அறுவடை ஆகும் பயிர்களுக்கும்
அடிநிலத்தில் வேர்கள் உண்டு !

இரும்பு இதயத்தையே உருக்கும்
இசைக்கும் வேர்கள் உண்டு !
இன்ப துன்பத்தை உணர்ந்திடும்
இதயத்திற்கும் வேர்கள் உண்டு !

எண்ணங்களை எழுத்தாய் ஆக்கும்
எழுத்தாளருக்கும் வேர்கள் உண்டு !
எழுச்சிமிகு கருவினை உருவாக்கும்
படைப்பாளிக்கும் வேர்கள் உண்டு !

கவிதையை வடித்திடும் சிற்பியாம்
கவிஞனுக்கும் வேர்கள் உண்டு !
கற்பனை அலைகளை கடலாக்கும்
கவிஞர்களுக்கும் வேர்கள் உண்டு !

வேர்கள் என்பதுவும் அடித்தளமே
வேர்கள் என்பதுவும் அடிப்படையே !
வேர்கள் என்பதுவும் அடிமனதே
வேர்கள் என்பதுவும் அடிநிலமே !

வேர்கள் என்பதுவும் சிந்தனையே
வேர்கள் என்பதுவும் சிந்தையே !
வேர்கள் என்பதுவும் வழியானது
வேர்கள் என்பதுவும் வலிவானது !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (29-Dec-14, 3:39 pm)
Tanglish : vergal
பார்வை : 863

மேலே