நாளை உனதே

இளைஞர்களே!
என்ன வாழ்க்கை இது என்று விரக்தியா........!!
வேண்டாம்.
இதோ இந்த வருடம் முடியப்போகிறதே என்ற விரக்தியா......!! வேண்டாம்.
நிச்சயமாக உன்னால் முடிந்ததை நீ செய்து கொண்டு தான் வருகிறாய்.
அதை நினைத்து சந்தோஷப்படு. மனதைப் போட்டு குழப்பிக்கொள்ளாதே.
மன அழுத்தம் மிகக் கொடுமையானது. யாருக்காகவும் எதற்காகவும் உன் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்காதே.
சே அது செய்யணும் இது செய்யணும்னு நிறைய யோசிச்சேன் ஒன்னுமே நடக்கலை என்ற வருத்தம் வேண்டாம். ஏதாவது ஒன்றாவது செய்திருப்போமே அதை நினைத்து சந்தோஷப்படுவோமே.
நாம் எதாவது ஒரு செயலில் இறங்கும் போது அவர் ஏதாவது சொல்வாரோ இவர் ஏதாவது சொல்வாரோ என்று கலங்கப்படாதே.. நீ நினைத்ததை மட்டும் செய்.
உனக்காக அவர்கள் யாரும் நாளை வந்து நிற்கப்போவதில்லை. வாழ்க்கையில் எப்போதும் எங்கும் பொறுமையை கடைபிடி.
பிறக்கும் புத்தாண்டை புதுப்பொலிவோடு உற்சாகமாய் வரவேற்போம்....