ஆதிக்கச் சுவை


மனைவியின் சமையல்
சுவையாக இருந்தாலும்
அம்மாவின் கைமணம்
அமையவேயில்லை !

இதே நிலைதான்
மகனுக்கும் பேரனுக்கும் !
வாழையடி வாழையாக
வாழும் தலைமுறைக்கும் !

மனைவிதான் மகனுக்கு அம்மா !
மகனின் மனைவிதான்
பேரனுக்கும் அம்மா !
கூட்டுக்குடும்பமாய்
பொதுவான சமையல்தான் !

இருந்தாலும் ...
மனநிலை மட்டும்
மாறவேயில்லை
தலைமுறை தலைமுறைக்கும் !

எழுதியவர் : balasubramanian (14-Apr-11, 7:39 pm)
சேர்த்தது : ezhilamizhdhan
பார்வை : 312

மேலே