கதையல்ல..


உன்னைவிடப் பேரழகி
உலகில் இல்லையென
முதல் பொய் !
காதல் வந்தது .

நீயில்லாமல்
வாழ்க்கையே இல்லையென
ஆயிரமாவது பொய் !
கல்யாணம் முடிந்தது.

இருவரும் இனிமேல்
உண்மையே பேசுவதென
உறுதிஎடுதோம் !

இருவரின் பொய்களும்
சரிநிகர் சமானமாய்
அம்பலமானது !

வாழ்க்கை கசந்ததால்
உறுதி குலைந்தோம் !
போலியான வாழ்க்கையை
மகிழ்வோடு வாழ்கிறோம்
பொய்யும் புரட்டுமாய் !

எழுதியவர் : balasubramanian (14-Apr-11, 7:54 pm)
சேர்த்தது : ezhilamizhdhan
பார்வை : 305

மேலே