அக்கறை பச்சை

அக்கறைக்கு போக எண்ணி ---நான்
இக்கரையை விட்டு வந்து இன்று

எக்கரையும் தெரிவதில்லை --இங்கே
என்ன செய்வது புரியவில்லை !

பொன் விளையும் வைகை கரை
இது போய் வந்த சிலர் கதை

கேட்டு விட்டு இங்கு வந்தவரை
கோட்டை விட்டது தன் சொந்த கரை

அகலக்கால் வைத்தவரை ---இங்கே
அசை பட்டு வந்தவரை

(வருட)ஒப்பந்தம் முடியும் வரை யாரும்
ஒன்றும் செய்ய முடிவதில்லை

அக்கறை பசுமைக்கெல்லாம்
அலை பாயும் நெஞ்சங்களே !

இக்கரை பசுமையில் தான் என்றும்
இமயம் அளவு திருப்தி உண்டு

(வலை குடா வாழ் அன்பர்களுக்கு சமர்ப்பணம்)

கவிஞர்:இறைநேசன்.

எழுதியவர் : ஸ்ரீவை .காதர். (14-Apr-11, 11:52 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 344

மேலே