காதல் இல்லாமல் புகையாது
வெளி திறந்தது
கதவு உள்ளலைத்த
விழிகள் ,
மெய் குழம்பிய
சிலிரிப்பு ,
கால் நுனிவிரல் நடுக்கம்
கண்ணனுக்கு புலப்பட,
விரும்பிய ஆகாரம்
கைவிடகூடாது என்ற
சூழ்வெறி அவனை
சூழ்ந்து அடிக்கிறது ,
நாட்களுக்கு
வயதாகி கொண்டிருபதால்
நடுங்கி தொலைகிறது
நரம்புகள் ,
இரத்த வாடை
மூக்கடைப்பை
தாண்டி மூளையை
சீண்டுகிறது ,
நூறு கோடி நன்றிகளை
நொறுக்கு தீனியக்குகிறேன்
உனக்கு ,
என்ன மொலியம்
செய்கிறாள்
பாவம் பார்கிறது
பூமி ,
கனவு காண்கிறான்
அவளின்
உள்ளானவன் ..