அண்ணா பசிக்குது

வடபழனி சிக்னலில் இருசக்கர வாகனங்கம் புரப்பட தாயாராக இருக்கிறது,பிச்சை யெடுப்பவர்களும், சில்லரை பொருள்களை விப்பவர்களும் தங்கள் செயலை செய்துகொண்டு இருந்தனர். ஒரு சிறுமி கையில் சில புத்தகங்களுடன் ஒவ்வொரு வாகனமாக சென்று, புத்தகங்களை வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டு இருந்தாள். ஆனால் யாரும் வாங்கவில்லை, அவள் மீண்டும் ஒவ்வொரு வாகனமாக சென்று கேட்டுக்கொண்டே இருந்தாள். அந்த சிக்னலில் நடுத்தர இளைஞன் அந்த சிறுமியை வெகுநேரம் பார்த்துக்கொண்டே இருந்தான். அவனுக்குள் ஒரு சஞ்சலம் அந்த சிறுமியிடம் யாரும் புத்தகம் வாங்க மறுக்கின்றார்கள் என்று. ஆனால் தன்னிடம் அவள் வந்தாள் வாங்களாமா? வேண்டாமா? என்ற கேள்வி அலையாய் வீசியது.

அவனுக்கு வாங்க ஆசை தான் ஆனால் சுற்றி இருப்பவர்கள் யாரும் வாங்காத நிலையில் தான் மட்டும் வாங்கினால் எல்லோரும் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்துடன் அந்த சிறுமியை பார்த்துக்கொண்டே இருந்தான். அவன் நினைத்தது போலவே அச்சிறுமி அவனை நோக்கி சென்றாள். அவன் சுற்றி ஒரு தடவை பார்த்த பின்பு சிறுமியை பார்த்தான்.

"அண்ணா ஒரு புக்கு வாங்கிக்கோங்க அண்ணா பசிக்குது இன்னும் சாப்பிடல" என்றாள்.

அவன் சுற்றி பார்த்துவிட்டு வேண்டாம் என்று தலையாட்டினான். சிறுமி மீண்டும் ஒரு முறை சொன்னால் இம் முறை மழலை கண்கள் நீர் தேங்கியது. சிறுமியின் கண்ணீர் அவனை என்னவோ செய்தது. அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் கண்கள் கலங்க தொடங்கியது. சுற்றத்தாறை மறந்து விட்டு அச்சிறுமியிடம் கேட்டான்.

"புக்கு என்ன வில"
"இருபது ரூபாய் ணா"
"ஒரு புக்கு கொடு"
"அண்ணா சிக்னல் போட்டுரூவாங்க நா அந்த பக்கம் போய் நிக்கவா?" என்று கேட்டால்
"ம்ம்ம்.... ஓரமா போய் நில்லு"

அவன் வாகனத்தை எடுத்துக்கொண்டு மறுபக்கம் அச்சிறுமியிடம் நிறுத்தினான்.

"என்ன பண்ற"
"படிக்குறேன் ணா"
"இன்னைக்கு ஸ்கூலுக்கு போகலையா"
"லீவுணா அதான் புக்கு விக்குறேன்"
"அப்பா என்ன பண்றாற்"
"அப்பா இல்ல ணா அம்மா மட்டும் தா"
"அம்மா என்ன பண்றாங்க"
"வேலைக்கு போறாங்க"
"நல்லா படிப்பியா"
"ம்ம்ம்ம் படிப்பேன் ணா"
"அண்ணா இன்னோரு பக்கு வாங்கிக்கோங்க"
"எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல டா இந்த புக்கு எனக்கு தேவபடாது உனக்காக தான் இந்த புக்க வாங்குறேன்"
"தேங்க்ஸ் ணா"

அவள் சென்றவிட்டால் ஆனால் அவன் வாகனம் ஒரு நிமிடம் தாமதித்தது, அவன் தானம் அளிக்கவில்லை ஆனால் அவள் சிரிப்பு, இவன் புத்தகத்தை வாங்கியவுடன் அவள் முகத்தில் கண்ட நிறைவு. ஒரு சிலிர்ப்புடன் அவன் வாகனத்தை துவக்கினான்.

எழுதியவர் : சுதாகர் ராமகிருஷ்ணன் (1-Jan-15, 8:34 pm)
Tanglish : ANNAA pasikkuthu
பார்வை : 325

மேலே