நான் சுயநலவாதி

வலித்தாலும் சிரித்தால்
நான் நல்லவன்!
வலித்தால் அடித்தால்
நான் கெட்டவன்!

இனிக்கும் பொய்கள் சொன்னால்
நான் நல்லவன்!
கசக்கும் உண்மைகள் சொனால்
நான் கெட்டவன்!

எல்லோருக்கும் சந்தோஷம் தந்தால்
நான் நல்லவன்!
எனக்கு சந்தோஷம் கேட்டால்
நான் கெட்டவன்!

பிறருக்காக வாழ்ந்தால்
நான் நல்லவன்!
எனக்காக வாழ்ந்தால்
நான் கெட்டவன்!

சிரித்துக்கொண்டே தியாகங்கள் செய்தால்
நான் நல்லவன்!
அழுதுக்கொண்டே கேள்விகள் கேட்டால்
நான் கெட்டவன்!

மற்றோரது ஆசைகளை நிறைவேற்றினால்
நான் நல்லவன்!
என் ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டால்
நான் கெட்டவன்!

என் கனவுகள் மீது கல்லெறிந்தால்
நான் நல்லவன்!
பிறர் கனவின் மீது கல்லெறிந்தால்
நான் கெட்டவன்!

மனசாட்சியை கொன்று வாழ்ந்தால்
நான் நல்லவன்!
மனசாட்சியை கொண்டு வாழ்ந்தால்
நான் கெட்டவன்!

சுயநலமான இந்த உலகத்தில்
நான் மட்டும் வாழ வேண்டுமாம்
பொதுநலமாக ...

எழுதியவர் : வினோத் ஸ்ர்னிவாசன் (2-Jan-15, 11:01 am)
Tanglish : naan suyanalavaathi
பார்வை : 2286

மேலே