புது வருடமும் நம் பயணமும்

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
நல்லோர்கள் நம் நாட்டில் தழைத்திட வேண்டும்
ஆண்டொன்று புதிதாகக் கண்டோம்
அதனூடே நாமும் நம் வாழ்வும்
திட்டமிட்ட சிறப்பு மிக்க செல்வம் உள்ள
சீரான வளங்களுடன் வாழ்ந்திட
உழைப்பும் ஊக்கமும் உயர்வும் அமைதியும்
நிம்மதியும் நிறைந்திட்ட
வாழ்வு எனும் பயணத்தை
நேர்மை எனும் துடுப்பு கொண்டு
நேர்வழியில் அமைத்திடுவோம்
ஒவ்வொரு ஆண்டும் ஆண்டவன் கொடுப்பதே
ஆண்டு அனுபவிக்க ஆனந்தமாய் வாழ

நல்லவையே ஞாலம் எல்லாம் நடந்திட
எள்ளளவும் குறைவின்றி
எண்ணம் எல்லாம் நிறைவேறி
அன்பு என்ற நலம் சேர்த்து
அனைவரும் இணைந்திருக்க
ஆண்டவன் அருளுகின்ற வரம் மிக்க வருடமாம்
இந்தப் புது வருடமாகும்

இன்னல் ஏதும் இன்றி
இன்பம் எங்கும் தோன்றி
இதயம் எல்லாம் நிறைந்திருப்போம்
இறைவன் புகழ் பாடி நிற்போம்
இதுவல்லோ வருடம் என்று
வியப்படைந்து வாழ்ந்திடுவோம்
வியத்தகு நல்லாண்டாய்
வியக்க வைத்து வாழ்ந்திடுவோம்

எழுதியவர் : பாத்திமா மலர் (2-Jan-15, 12:20 pm)
பார்வை : 126

மேலே