குப்பைதொட்டியில் குரல்
(பின் குறிப்பு : குப்பை தொட்டியில் எறியப்பட்ட ஒரு பெண் குழந்தையின் கதறல் )
என்னவளே ....
எனக்கு ஏன் இந்த வலி ....??
நான் பிறந்ததால் எறிந்தாயோ ...!!!
இல்லை ,,,
இப்படி பிறந்ததால் எறிந்தாயோ ...!!!
இனி என் எதிர்காலம் எப்போதும்
அழுகையின் அர்த்தம் அறியாது வாழ்வேன்
என் அன்னையின் அரவணைப்பில்
என நான் எனக்குள் எண்ணி
அழுதுகொண்டே பிறந்ததால் வெறுத்தாயோ .........!!!!!
உன் வருங்கால வாழ்வின்
நீ அடையும் கடைசி வலி
என நான் எனக்குள் எண்ணி
வலிமையான வலி கொடுத்து பிறந்ததால் வெறுத்தாயோ ...........!!!!!!
உன் வாழ்வின் கருமையை
என் விருப்பத்தால் விலகிடுவேன்
என நான் எனக்குள் எண்ணி
கருமையை என் தோலில் சுமந்து பிறந்ததால் வெறுத்தாயோ .......!!!!!!
உன் பணியை நீ செய்ய
என்னை தடையாய் கருதி
நமக்குள்ள உறவை மனதால் மறந்தாயோ
இல்லை ,,,
பணி பாசத்தின் கண்ணை மறைத்ததோ .......!!!!!
கடவுளை காண்பேன் என் தாயாக என்று
உன் கருவறையை விட்டு வெளி வந்த எனக்கு
உன் உடன் இல்லா இந்த உலகம்
கல்லறையாய் தோனுதம்மா ....................
எனக்கு ஏன் இந்த வலி ?????