காதலின் விந்தை
பூ போல
குலுங்கி சிரித்தாய்
பெண்ணே உன்னால்
அன்று
உறங்கலயே!!..
அனல் போல
முறைத்து எரித்தாய்
உந்தன் கண்ணால்
இன்றோ
நானோ தாங்கலயே!!..
பனித்துளியை போல
என்னுள் காதல்
குளிரை தந்தாயே....
இன்றோ
எரிமலையின்
தீபிளம்பாய் என்னை
எரித்து கொன்றாயே ஏனோ ??...
இரவும் பகலும்
ஒருசேர வருவதும்...
அனலும் மழையும்
ஒன்றாய் பொழிவதும்..
காதலில் இணைந்த
நம் நெஞ்சகளில் மட்டுமேனோ !!
காதல் ....
சொர்கத்திற்கும்
நரகத்திற்கும்
நடுவே உள்ள சோலையா?
நீருக்கும்
நெருப்புக்கும்
விழுந்த மாலையா ?
இல்லை ......
விருப்புக்கும்
வெறுப்புக்கும்
உள்ள சாலையா ?
யார் அறிவார்
இவ்வுலகில் இதனை..
இக்காதலின் விந்தையை??
நம்மைத்தவிர .......
அல்ல
"காதலிப்போரை தவிர !!....."