புரிந்து கொள் பெண்ணே நீ
வீதியில் சென்றாள்
விதவை ஒருத்தி
விதியின் நிழலாய்
அவளின் பின்னால் ஒருத்தி.
வீணாய் பேசி அவளின்
மனதை புண் படுத்தி
விளையாட்டு பொருளாய்
அவளை கை படுத்தி..
வார்த்தைகளால் அவளை
சிறை படுத்தி
விதவையை அவள்
வேதனை படுத்தி.
பெண்மையை புரியாத
அந்த பெண் ஒருத்தி
பேயாய் பேசினால்
அவளை அசிங்க படுத்தி..
பெண்ணுக்கு பெண்ணே
எதிரியானால் என்னவாகும்
இந்த பொன்னுலகம்
புரிந்து கொள் பெண்ணே நீ.