காதல் தோல்வியல்ல வெற்றி

காதல் தோல்வியே வெற்றி

காதல் காற்றினைப்போல எங்கும் நுழையும் கற்களை தவிர !
காதல் தோல்வியென்பது புயல்கற்றுபோல எப்போதாவது பிடிபடும் எவர் கையிலாவது !
காதல் தோல்வியென்பது தவம் செய்தாலும் கிடைக்காத பாக்கியம் !
நாமாகவே நாம் நமக்களித்த வரம் !
இந்தவலியை தாங்கிப்பார் இதைவிட எதிர்ப்பு சக்தி உனது உடலுக்கும் உயிருக்கும்
வேறு எவர்நினைதாலும் தரமுடியாது !
பூமியின் பொக்கிஷம் தோல்வி !
வெற்றியில் புதைந்துள்ள வேதனை தோல்வி !
வேதனை தீயில் வெடித்தெழுந்த வெற்றிதான் காதல் தோல்வி !

புரிந்துகொள் !
புரியாது ! நிச்சயமாக
ஏன் என்றால் நீ தோற்றுவிட்டாய் !
மாற்றிக்கொள் !
மனதினையும் ,மரணத்தையும் !

வாழ்க்கை போரினை எதிர்கொள்ள வைக்கப்படும் நுழைவு தேர்வுதான் காதல்!
ஒருமுறை தோல்வியுற்றால் மாற்றம் உனதாகும் !
பின் ஏற்றம் நமதாகும் !
கண் இமைக்கமறந்தாலும்!
காதலிக்க மறக்காதே !

மாலினி போனால் மற்றவள் வேண்டாம் !
மனைவி போதுமே !
மானிட உலகம் மடிவதும் !
பணிவதும் மங்கையர்க்கு மட்டும் தானே !
வேறெவர்க்கு !

வெற்றியெனும் இனிப்பைக்கொண்ட வேப்பிலைதானே காதல் !
பற்றிக்கரைதொடு தோழி/தோழா !
துடித்தெழு !
துயர்படு!
துவண்டுவிடாதே!

தோல்விக்கு காரணம் யார் ?
நன்றாக எண்ணிப்பார் !
உற்றுநோக்கி உணர்ந்துபார் !
எல்லாமே நாம் செய்த கர்மம் தான் !

அன்று ஷேக்ஸ்பியர் தோற்கவில்லை என்றால் !
இன்று சீசர் இல்லை !
அன்று பாபர் தோற்க்கவில்லைஎன்றால்!
இன்று பாக்கிஷ்தானம் இல்லை !

தோல்வி நம்மை வேறு உலகிற்கு இட்டுச்செல்லும் செயற்கைக்கோள் !
அதுவும் நாமாகவே உருவாக்கியது !
வாழ்க்கையில் வெற்றிமட்டுமே கண்டால் வேடிக்கையாக இராதா !
தோல்வித்தேனை சுவைத்துப்பார்க்க ஆசையாக இல்லையா!

நாம்படும் தோல்வி எல்லாம் ஒரு தோல்வியா !
மாயக்கண்ணனுக்கும் மங்கையுடன் தோல்வியுண்டு தெரியுமா !
மன்னன் புத்தருக்கும் மனைவியுடன் தோல்வியுண்டு தெரியுமா!
உளிபாடும்போது வழிபடும் எந்தக்கல்லும் சிலையாகாது!
விதையினை விழுங்காத எந்தப்பரப்பும் வனமாகாது !
தோல்வி விதையினை விழுங்கு !
வெற்றிக்குளத்தில் கலங்கு !

எண்ணங்களை ஈடேற்ற எழுந்துநில் !
தடுப்பதற்கு ஆயிரம் தடைகள் தகர்த்தெறி !
தவழ்ந்தாவது தவிடுபொடியாக்கிவிடு!
எண்ணக்குருதியை தொல்வித்தீ கொண்டு சூடேற்று!
ஆழமனத்தினை அழகிய கரையில்வேரூன்று !

தொட்டுப்பர்ப்பர் !
நீ கட்டிப்பார் !
அவர்களை காலம் உணர்த்தும் !
நீ கலந்கிவிடாதே !

அறியாமல் செய்த தவறை அறியாமல் இருக்காதே !
அணைத்துவிடு !
பணிந்து நட பாலைபூக்கும் !
துணிந்து செல் துயரம் தோற்கும் !

பேய் இருந்தால் தெய்வமுண்டு ஏற்கிறேன் !
நோய் இருந்தால் மருந்தும் உண்டு ஏற்கிறேன்!
தோல்வியென்றால் வெற்றி நிச்சயம் ஏற்கிறாயா ?
ஏற்றுக்கொள் !
இல்லையென்றால் ஏறமாட்டாய்!
ஏமாற்றப்படுவாய் !
காலத்தாலும்!
கண்ணீராலும்!...........................................................
ப.சுகுமாறன்

எழுதியவர் : ப.சுகுமாறன் (8-Jan-15, 11:09 pm)
சேர்த்தது : சுகுமாறன் கவிஞன்
பார்வை : 80

மேலே