அவள் எனது அழகிய தோழி

வாடா நண்பா ஜாலி அந்த
வானத்தின் வண்ணங்கள் ஹோலி
வாடா மல்லிகள் கோலி - தென்றல்
வந்தால் நமக்குத் தோழி.....!!

புரிந்த மனசுகள் இருந்தால் இந்தப்
பூமியில் ஆண் பெண் நட்பும் வேதம் - இதைப்
புரியாமல் புலம்பித் தவித்தால் - அது மனித
புத்திக்கு சமுதாயம் கொடுத்த ஒரு சாபம்....!!

கற்ற கல்வியா இல்லை ஹார்மோன் திமிரா
கருத்தில் தெளிவோம் நட்பு ஒரு வரம்....நமை
காணும் விழிகளில் நல்லதே தெரியட்டும் - என
கைகளை குலுக்கினேன் - தோழி திருநங்கையிடம்....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் வா (10-Jan-15, 4:58 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 382

மேலே