சித்திரையை கொண்டாடி முத்திரை பதிப்போம் வா
எத்தனையோ எண்ணங்களை
இயன்ற தமிழில் எழுதியாச்சு!
சித்திரை தினம் தான்
தமிழர் புத்தாண்டுவென புலனாட்சி !!
சனவரியை தலையில் தூக்கி
கொண்டாடும் தோழர்களே!
தமிழ் புத்தாண்டின் சோகமதை
கொஞ்சம் எண்ணி பாருங்களே...!!
எத்தனை பேர் இன்பமுடன்
புத்தாண்டை வரவேற்று மகிழ்கிறோம்!
இந்நிலையில் நாம் தமிழரென்றே
பெருமை கொண்டாடுகிறோம்...!!
வெட்கி தலை குனியும் தமிழ் மகளை
தைமகளின் கரம்கொண்டு கண்ணீர் துடைப்போம்!
ஆதவன் உதயமது மேசத்திலே
ஆளும் சித்திரை மாசத்திலே...!
ஆதலினால் தமிழர் புத்தாண்டு அன்றே !
தரணியாண்டு தமிழ் புகழோங்க...!
கோடையிலே வாடும் உயிர்கள் போலே
வாடிப்போன தமிழை வளமாக்க...!
அனைவரும் கொண்டாடி மகிழ்வோம்!
வண்ண விளக்குகளால்
வீடுதோறும் அலங்கரிப்போம்!
வீதியிலே வெடிவெடித்து
கொண்டாடுவோம் !
இல்லையென்ற ஏழையர்க்கு
இருப்பதற்கேற்ப அள்ளி கொடுப்போம்!
இயன்றவரை பிள்ளைகளை
தமிழ் சொல்லி வளர்ப்போம் !!
ஆள் பாதி ! ஆடை பாதியென்று
தமிழ்மொழி சொல்ல !
கதர் ஆடை போட்ட
தமிழ் மகன் எங்கே?!!
ஆங்கில மோகத்திலே
ஆடிமகிழும் ஆனந்தத்திலே
அனைவர் பாதாடியில் மிதியுண்டு
அன்னைத்தமிழ் அவதியுறுகிறாள் ...!
ஆளில்லாது ஆதரவற்று
செந்தமிழ் பதவியேற்று
செருக்கில்லா திருப்பதினால்
தெரிவதில்லை அவளது பெருமை...!
உலகம் முழுக்க சுற்றும் போது
அறிந்துக் கொள்வாய் தமிழின் பெருமை!
கண்டம் விட்டு கண்டம் ஆளும்
தமிழினம் நாமே...!!
கண்டுகொள்ளாது போவதினால் அழிக்கிறோம் வீணே !
பெற்ற பிள்ளை நோயில் தவிக்க
மற்ற பிள்ளை பெருமை பேசி
நமக்கென்ன இலாபம்!!
சுற்றம் பார்க்கின் குற்றமில்லை
சுவடை அழித்தால் தமிழுமில்லை!
பகடை காயாய் பலியாடாய்
விலங்கிட்ட கையுடைத்து வா வெளியே !