சாதி ஒழி - பொங்கல் கவிதை போட்டி 2015”
தமிழன் எந்தன் சாதி இதை தரணியெங்கும் போதி
உயிர் கொடுக்கும் நீதி புது வழியில் வருவாய் நீ
அதிகமானின் கதையும் சிபி அருளிய நடுநிலையும்
புதிய உலகை படைக்க எடுத்தேழுதணும் வழிமுறையும்
தமிழன் எந்தன் சாதி இதை தரணியெங்கும்போதி
அலைகடலை பழக்கி மின்சாரம் படைக்க
ஒளி நிறத்தை மாற்றி ஓம்சக்தி பிறக்க
பெருமளவாய் வருவாய் பதில் எனக்குத்தருவாய்
சுருங்கியது உலகம் அருகில் வந்த நிலங்கள்
தொலைபேசியில் பேசி ரயில்வேகத்தை மாற்றி
வந்துவிடும் உலகம் உள்ளங்கையில்
புது உலகை படைக்க விரைந்திடுவாய் நீ
தமிழன் எந்தன் சாதி இதை தரணியெங்கும்போதி
அந்தணரும் பந்துக்களாய் ஒன்றுபடுவர் பிஞ்சு மன
பெண்களையே தஞ்சம் கொள்வர் தென்னாட்டின்
பண்பாட்டில் வஞ்சியரும் வாலிபரும் தென்படுவர்
வீருகொண்டு வருவாய் வேண்டுவதை பெறுவாய்
புதுயுகத்தின் தலைவாசல் தமிழன் அரசாட்சி
இந்தியாவின் மறுமலர்ச்சி புத்துணர்சி
சாதியில்லை என்றதும் சாந்தி உருவாச்சி