முப்பொழுதும் காத்திடுவோம்

அந்தி சாயும் சமயமிது
அஸ்தமனம் ஆரம்பமிது
சந்தடி இல்லா மாலையிது
சந்திரன் வரும் வேளையிது !

ஊரே அடங்கிடும் பொழுதிது
உள்ளங்கள் ஒடுங்கும் நேரமிது
பறவைகள் படுக்கும் நிமிடமிது
உயரினங்கள் உறங்கும் நேரமிது !

அசையும் மரங்கள் ஓய்வெடுக்கும்
இசையாய் காற்றும் ஒலித்திடுமே !
பகையின்றி உரசிடும் பனைமரங்கள்
படமாய் உரைக்கிறது பாடம்தன்னை !

இனஒற்றுமை இங்கே காட்சியாக
இல்லாததை நம்மிடம் சாட்சியாக !
அக்றினைப் பொருளும் அறிவுடனே
அறிவிக்கிறது நமக்கும் பாங்குடனே !

வளர்ந்தாலும் மரங்களிடம் ஒற்றுமையே
வளர்ந்தபின்னும் நம்மிடம் வேற்றுமையே !
அரணாவோம் நம்மொழிக்கும் இனத்திற்கும்
முரண்படாது முப்பொழுதும் காத்திடுவோம் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (11-Jan-15, 8:56 am)
பார்வை : 348

மேலே