மீண்டும் நீண்ட இடைவெளியுடன்
அனுபவம் புதியது இல்லை
வயதானவர்களுக்கு. ஆனால்
பகிர்வது புதியது.
நான், நீ
இன்று
மின்னணு நிழல்.
நீ பார்க்கிற அம்சம்
நான் அஞ்சுகிற
காலம்.
ஆனால்
நாளை நீ அதை
கண்டு அஞ்சும் போது தெரியும்.
நேற்று கழித்ததை போல நாளையும் அப்படி கழியாது.
இதுவே
பரிணாமம் ஆகும்.