கவிஞர்கள் கொண்டாடும் பொங்கல் திருவிழா
வீட்டின் கூரையினில் சொருகிய பூலாப்பூ....!
வீதியில் கோலத்து நடுவில் பூசனிப்பூ....!
விடைகொடுத்த மார்கழி மாத பூரிப்பில்
விடிவெள்ளியாய் தோன்றிய தை மாத பூ.
பூவையர்கள் புத்தாடையுடுத்தி...!
புது பானையிலே மஞ்சள் கட்டி....!
புத்தம் புது அரிசி போட்டு....!
பசும்பாலுடன் வெல்லம் சேர்த்து....!
வெண் நுரையுடன்
பொங்குகிற வேளையிலே....!
பொங்கலோ பொங்கல் என்று கூவி....!
பகலவனை நினைத்து பறைசாற்றும்
பொங்கல் திருவிழா.
நன் நிலத்தில் கால் வைத்து....!
நாளும் வியர்வை சிந்த உடல் உழைத்து.....!
நெல்மணி கதிர்களை நெட்டெனதழைத்து....!
நெற்களஞ்சியம் நிரம்பிட உழைக்கும்
உழவனுக்கு இது உழவர் திருவிழா.
காளைகளை இளம் காளையர்கள் அடக்க.....!
கன்னிகள் அதை கண்ணால் காண....!
வாலிபர்கள், பாவையர்களை மயக்க
மல்ஜிப்பா உடையணிந்து....!
மைனர் வேடம் போட....!
பாவையர்கள் அலங்காரமாய்
அதற்கு அடியுரம் போட....!
கிராமத்து நறுமணம் நிரம்பிட....!
கிறங்கடித்து கொண்டாடும் கிராமிய திருவிழா.
மாட்டுவண்டியிலே
இளம் கன்னியர்களை ஏற்றி.....!
மழலைகள் மதி மயங்க ஊரை சுற்றி.....!
போற்றி புகழ் பாடும் பெரியோர்களை கண்டு.....!
பரந்த மனதுடன் கொண்டாடும்
பாரம்பரிய திருவிழா.
இலக்கிய காலத்தில் இது இந்திர விழா.....!
இக்காலத்தில், பளீரென ஒளிகற்றை வீசிய
கதிரவனுக்கு நன்றி சொல்லும் விழா....!
நம் தமிழகத்தில் இது பொங்கல் விழா.
தமிழ் எழுத்துக்கள் எனும் அரிசியை
எழுத்து தளம் எனும் பானையில் இட்டு....!
பரிசுபோட்டி எனும் வெல்லம் சேர்த்து.....!
போட்டியில் பொங்கிய கவிதைகளை
தமிழ் அன்னைக்கு படையலிட்டு.....!
கவிஞர்கள் கொண்டாடும் தமிழ் திருவிழா.
##################################################################################
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்