சிறிய செயல் -சிதறிய மதி -பெரும் விளைவு

-- சிறிய செயல் சிதறிய மதி பெரும் விளைவு

மும்பாய் நகரம் முழுதும் விழா கோலமாக இருந்தது.
நகரம் முழுவதும் கொண்டாடபடும் ஒரு மிக
பெரிய பண்டிகை. வினாயகர் சதுர்த்தி.
தெருவில் உள்ளவர்கள் யாவரும் சேர்ந்து
ஒரு சிறிய பந்தல் அமைத்து ஒரு கணபதி சிலையும்
அதில் வைத்து, பூஜை செய்ய ஒரு பண்டிதரையும்
அமர்த்தினர்.
எல்லா வயதினரும் ஒன்று சேர்ந்து பத்து நாட்கள்
கொண்டாட முடிவெடுத்து தினமும் பஜனைகளும்
சுண்டல் வினியோகமும் நடை பெற ஏற்பாடுகள்
செய்ய பட்டது.
பத்தாவது நாள் விசர்ஜன் தினம் விசேஷ பூஜை
நடத்த பட்டு வினாயகரை கடலில் கரைக்க சிறு
சப்பரத்தில் வைத்து ஆட்டமும் பாட்டும் சேர குதூகலமாக
வழி அனுப்ப எல்லோரும் சூழ்ந்து இழுக்கின்றனர்.
தெருவெல்லாம் வான வேடிக்கை.
மும்பையில் உள்ள தெருக்களில் மிகவும் முக்கியமான
வியாபாரிகள் வாழும் பகுதியில் சப்பரம் திரும்பியது.

நெரிசல்நிறைந்த இடம்.மத சாதி கலவரம் எப்பொழுதும்
வெடிக்கும் ஒரு தன்மை உடைய இடம்.

சப்பரம் இவ்வழியாக இழுக்க பட்டு வரும் பொழுது,
பெண்களும் சிறிமியரும்அடுக்கு மாடி கட்டிடத்தில்
பால்கனி மூலம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.

அங்கு உள்ள ஒரு வீட்டின் மாடியில், தெருவில் நடக்கும்
நிகழ்வுகளை காண எண்ணி ஒரு சின்ன குழந்தை
மெல்ல நடந்துவந்து பால்கனியில் முகம்புதைத்து
எட்டி பார்க்க முயற்சித்தது,பார்க்கமுடியவில்லை
ஏக்கத்துடன் கோபமும் சேர்ந்து கொள்ள வேகமாக
திரும்பி ஓடி வர,இறைந்து கிடந்த
மிதிஅடிகளில் ஒன்றை கால் தடுக்கி தட்டி விட,
அது கீழே செல்லும் கூட்டத்தில் விழுந்தது.
அந்த சிறு பெண்ணின் இந்த செயலை யாரும்
கவனிக்கவில்லை.
கூட்டத்தில் மிதியடி விழ அது ஒருவர் மீது பட்டு பின்
சப்பரத்தில் விழுந்தது.
அதை வினாயகரின் அவமதிப்பாக கருதி குரல் எழ
அனைவரும் தன்நிலை இழந்தனர்.
சாதிவெறி ஆட்கொள்ள கற்களும்
மிதியடியும் மேல்நோக்கி பறந்தன.தெரு எங்கும் ஒரே
கூச்சல் ஆரவாரம்.மனிதர் மிருக தன்மையுடன் ஒருவரை
ஒருவர் தாக்கிக்கொள்ள கைகலப்பில்,அடி தடி வலுக்க
எங்கும் இரத்த காயம்.
கூட்டம் சிதறியது ஆண் பெண் சிறுமியர்
வயோதிகர் எல்லோரும் காயமடைந்து தவிக்க,
ஆட்டமும் பாட்டும் அழுகையாக மாறின.

வினாயகர் சப்பரம் வீதியில் அனாதையாகியது.

தன்னை சுற்றி நடப்பது என்ன என்று அறியாது அச்சிறுகுழந்தை
பால்கனியில் இருந்து மீண்டும் எட்டி பார்க்க களை இழந்த தெருவில்
உள்ள அவ் வினாயகர் நன்றாக கண்களுக்கு தெரிந்தது.
ஒரு சிறிய சிரிப்பையும் உதிர்த்தது.
சிரிப்புக்கு பின்னால்
வினைதீர்க்கும் வினாயகரை வழி அனுப்ப யார்
வருவாரோ என நினைதிருக்குமோ அந்த பிஞ்சு மனம்....

எழுதியவர் : (16-Jan-15, 12:31 am)
பார்வை : 256

மேலே