செல்லலாமா வேண்டாமா

நான் தட்ட
விரும்பவில்லை
அவள் மனக்கதவு
தானே திறக்கும்...

அவளைக் கவர
முயற்சி எதற்கு...?
எனினும் தேவை போலும்...
வயிற்றைத் தவிர அவள்
உடம்பில் வேறெதற்கும்
உணர்ச்சி இல்லை போலும்...

அந்த நொடிகளெல்லாம்
தனிமைக்கும் கனவுக்கும்
மட்டும்தான் அவள்
பரம ரசிகை போலும்...

ஆனால் இங்கோ...
என் மனதிலோ...

எவளின் மன
வெற்றிடத்தை
நிரப்ப நினைக்கிறேனோ...

எவளை நித்தமும்
நினைக்கிறேனோ..

எவளின் வாழ்க்கையின்
பாதி நான் என்கிறேனோ...
என் வாழ்க்கையின்
மீதி என்கிறேனோ...

எவளின் புன்னகையில்
என் இருளில் மெழுகுவர்த்தி
இடம் கொள்கிறதோ...

எவளின் முன்
நான் தான்
இவ்வுலகில் வென்றவன்
என எனக்குள்
எண்ணம் புதுமை அடைகிறதோ...
ஏன்...? நானே புதுமை
அடைகிரேனோ...

எவள் இனி எல்லாம்
எனக்கு என்கிறேனோ...

எவளை நினைத்தால்
கவி பிறக்கிறது என்கிறேனோ...

எவளின் வரையறுக்கும்
பட்டியல் நீள்கிறது
என்கிறேனோ...

அவளுக்கு
என் கவிதை போல்
என்னையும், என் காதலையும்
புரியவில்லை...

புரியாத புதிரான
உறவை நோக்கி
நான் - அவளை நோக்கி நான்...

என்னை நோக்கி அவளும்...
என்னை எதிர்பார்த்து
அவளும் இருக்கிறாளா...?
அருகே சென்றால்தான்
தெரியும் போலும்...

செல்லலாமா...?
வேண்டாமா...?

எழுதியவர் : (16-Jan-15, 1:49 pm)
பார்வை : 252

மேலே