எருக்க பூக்கள் - உதயா

ஊரெங்கும் மல்லிப்பூக்கள்
வலமாக உளமார
இன்ப தென்றலும் பலருக்கு
இனிமையாக வீசுதையா

அன்பு ஊற்றெடுத்து
ஆனந்த கடல் சேர்ந்து
பாச தோனியின் பயணத்தில்
பாவியெனக்கு இடமில்லையம்மா

சிறகொடிந்த சிட்டாக
பிறந்தது என் குற்றமா ?
சிறகின்றி வாழ்வில்
பறக்க நினைத்தது குற்றமா ?

எருக்க பூவாகவா
மலர நினைத்தேன்
தாயின் மலட்டை தணிக்கும்
மழலை பூவாகாதான் மலர்ந்தேன்

எருக்க பூவாக
பூத்தது சாபமா ?
பாலை மனம்கொண்ட
மக்களோடு மலர்ந்தது சாபமா ?

சுவாச காற்றும்
சமமான உலகில்
அன்பில் பிரிவினை
பார்ப்பது ஏனோ ?

கருவேல முள்ளாக
பார்க்கும் பார்வைகள் ஏனோ ?
அரலி சுவையாக
உதிரும் வார்த்தைகள் ஏனோ ?

வனவாச ஒருமுறை மலரும்
குறிஞ்சி பூவாக
சிலரிருப்பதால் என்னவோ
எருக்க பூவும் மாலையாகிறது
யானைமுகத்தனுக்கு

கானக் குயிலாக
தவிப்பை மனதோடு
பாடியே தணிக்கிறேன்
மனம் திறந்து பாடினால்
குறிஞ்சி பூவாடிடுமோயென
நினைத்தே ............

எழுதியவர் : udayakumar (17-Jan-15, 9:35 am)
பார்வை : 96

மேலே