எழுத்து ஒரு யானை போன்றது

உருவாகும் எழுத்துக்கு
உதவியாய் இருக்கும்
எழுதுகோலுக்கும்-
எழுத்தைத் தாங்கும் தாளுக்கும்-
வலி இருக்கிறதோ! இல்லையோ?
எழுதுபவனுக்கு வலி இருக்கும் ...

தாங்கமுடியாத உணர்வுகளை ...
தாங்கமுடியாத துன்பங்களை ...
தாங்கமுடியாத சூழ்நிலைகளை ..

அது -
எதுவாக இருந்தாலும் ...
எழுதுபவனுக்கு
கைவலிக்கிறதோ! இல்லையோ?
கண்டிப்பாக மனம் வலிக்கும் ...
.

தாயின் கருவிலிருந்து
பிறக்கும் குழந்தையும் -எழுத்
தாளனின் மனத்தில் இருந்து
பிறக்கும் கருத்துக் குழந்தையும்...
பிரசவிக்கும்போது வலி ஏற்படுவது
இயற்கை ..


உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை -
உண்மையாக எழுதும்போதும் ...
உள்ளத்தில் ஏற்படும் வலிகளை
உண்மையாக வெளிப்படுத்தும் போதும் ...

எழுத்தாளனுக்கு
ஏற்படும் மனவலி-
என்பது ....
ஒரு தாயின்
பிரசவ வலி.

அது -
எப்போது
ஆறும் தெரியுமா?

அவன் எழுத்து
அங்கீகரிக்கப்படும்போதுதான் ...

அங்கிகரிக்கப்படவில்லை என்றால்
அவன் அழப்போவதில்லை ...

அவனுடைய கருத்துப் பிரசவம்
நூலாகப் பிறந்தபிறகு ..


அது -
இருந்தாலும் ஆயிரம் பொன்
இறந்தாலும் ஆயிரம் பொன் ...

எழுதியவர் : மா. அருள்நம்பி (17-Jan-15, 11:41 pm)
பார்வை : 283

மேலே