ஜல்லிக்கட்டு மல்லுக்கட்டு

வரலாறு இல்லாதவர்களே
அடையாளத்தை முன்னிருத்த முயற்சிப்பார்கள்!
பாரம்பரியம் இல்லாதவர்களே
நாகரிகம் இருப்பதுபோல் நடிப்பார்கள்!

வீரத்தின் விளைநிலம்
மானத்தின் மாநிலம்
பண்பாட்டின் பன்னிலம்
நாகரிகத்தின் நன்னிலம்

அரசியல் அதிகாரங்கள்
பாரம்பரியத்தை முடக்குமா?
எவர் உரிமையை எவர் பறிப்பார்?
எவர் கலையை எவர் இழப்பார்?

மேற்கத்திய கலாச்சாரங்கள் என்றே
ஒதுக்க ஆரம்பித்துவிட்டால்
இந்திய அரசியலமைப்பும்
மேற்கத்திய கலாச்சாரம்தானே!
இதையும் ஒதுக்கிவிடுவீர்களா...?

அடிமையே கொடுமை
அதிலும் உள்நாட்டு
அடிமையே மிகக்கொடுமை!

உணர்வுகள் மறுக்கப்படும் தேசத்தில்
ஜனநாயகம் தழைத்து விடுமா என்ன?
மக்களின் உணர்வுகளை மதியாதார்
தானே அழிந்துபோவதை இப்போதுதானே
கண்ணில் கண்டோம் லங்கையில்!

கடவுளிடம் மக்களைக் காப்பாற்ற
நேரடியாக வேண்டாமல் தலைமையை
காப்பாற்ற மக்களையே கடவுளிடம்
வேண்ட சொல்லும் பாழ்பட்ட
அரசியல் உலகம் மக்களை
நட்டாற்றில் வீட்டு வேடிக்கைப் பார்க்கும்!

இன உணர்வுகொண்ட சில கடைசி
மனிதர்களின் இறுதி மூச்சுவரை
கொடிபிடிக்கும் ஆர்ப்பாட்டங்கள் தொடரும்...!

எழுதியவர் : அலெக்சாண்டர் (18-Jan-15, 1:09 am)
பார்வை : 85

மேலே