மனோ தவம் என்பது - அடக்குவது அல்ல - அறிந்து கொள்வது
நிலவிலே எழுதினேன்
ஒருவரிக் கவிதை - அதை
நேர் வகிடு என்றே
நீங்களும் படிக்கலாம்.....!!
அழகினை ரசிப்பதும்
அற்புதக் கலையே - மன
ஆசையை தொலைப்பதும் - தவ
ஆரம்ப நிலையே...!!
ஆசையை தூண்டுவது
அழகதன் நிலையே - உண்மை
அழகினை உணர்வது - தவ
ஆரம்ப கலையே ....!!