வயக்காட்டில் ஒரு வசந்த உலா

..."" வயக்காட்டில் ஒரு வசந்த உலா ""...

கன்னங் கருத்தப்புள்ள
கண்டாங்கி சேலைக்குள்ள
சிணுங்கியவ நடக்கையில
நரம்புக்குள்ள ஓடும் ரத்தம்
நறுக்கென்றே சூடேற !!!

மஞ்சள் ரவிக்கையிலே
முக மஞ்சள் பூசிவாரவளே
மசான்னான் வாங்கித்தந்த
பாசிமணி காசுமால உன்
கழுத்துக்கு பொருத்தமாதானிருக்கு !!!

மையெழுதிய கயல்விழியும்
செந்தூர சிறு நெற்றியும்
சிருங்கார புன்னகையில்
கருப்பு வெல்ல வளையலிலும்
கச்சிதமா இருக்குபுள்ள !!!

நேசமான மச்சானுக்கு
பாசமாக கலயத்திலே
பழையசோறு கொண்டுவரா
வரப்போரம் வயல்வெளியில்
வஞ்சியவள் குலுங்கிவரா !!!

வெள்ளமான முள்ளங்கியும்
வெடிக்காத தக்காளியும்
வென்பூண்டு சேர்த்தெடுத்து
பந்து கொண்டபோட்டு
பச்சைக்கிளி நடந்துவரா !!!

இயற்கையான உணவுகளை
இடையினிலே சுமந்தவளே
ஆண்மகனின் வீரம்காட்ட
மஞ்சு விரட்டியே நாபுடிச்ச
மஞ்சு வாரியரும் நீதானே !!!

என்றும் உங்கள் அன்புடன்,,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (20-Jan-15, 10:17 am)
பார்வை : 483

மேலே