முன்னேற்றம் - உதயா

நான் வழக்கம் போல எங்க ஏரியாவுல இருக்குற டீ கடையில உட்காந்து நியூஸ் பேப்பர்
படிசிகிட்டு இருந்த
அந்த கடைக்கு பக்கத்திலே ஒரு தள்ளு வண்டியில இட்டிலி வித்துகிட்டு இருந்தாங்க ...
ஒரு வயதான முதியவர் அந்த பக்கம் வந்தார் ..
அந்த தள்ளுவண்டி கடைக்கு போயி அம்மா எனக்கு பத்து பைசாவுக்கு ஐந்து இட்டிலி தாங்கன்னு கேட்டார்.
அதுக்கு அந்த கடைக்காரி பெரியவரே நீங்க எந்த காலத்துல இருக்கிறிங்க ..
இப்போ ஒரு இட்டிலி மூன்று ரூபாய்னு சொன்னால் .....
என் மா இப்படி அநியாயம் பண்ணுற ??
கொடுமா இட்டிலிய இந்தா பத்து பைசான்னு சொன்னார் அந்த பெரியவர்
யோ இப்போ போரிய இல்லையா ??
காலையிலே வந்துட்டாங்க சாவுகிராகினு அந்த கடைக்காரி கத்துனா ..
நா அந்த பெரியவர்கிட்ட போனான் . தாத்தா இப்போ இந்தியா முன்னேறின நாடு . விலைவாசியும் அதிகமாகி போச்சி ..
இந்த கடையில ஒரு இட்டிலி காசு மூனு ரூபாய் தாத்தா .. இங்க நம்மள மாதிரி ஏழைகளா சாப்புற கடை அதுவே பணக்காரங்களுக்குனா ஐந்து நட்சத்திர உணவகம் தாத்தா ....
ஆமா நீங்க இவ்வளவு நாளா எங்க போயி இருந்திங்க
தம்பி எனக்கு நாப்பது வருஷத்துக்கு முன்னாடி தலையில அடி பட்டுடிச்சி உடனே மயக்கம் வந்துடிச்சி
கண்விழிச்சி பாத்தா நா கோமாள இருந்தனு டாக்டர் சொன்னாரு பா .....
எங்க காலத்துல மூனு ரூபாய் இருந்த ஒரு கல்யாணமே பண்ணலாம் தம்பி ..
இப்போ என்ன நா ஏழைகளுக்கு ஒரு உணவகம் ......
பணக்காரங்களுக்கு ஒரு உணவகம் கேட்ட இந்தியா முன்னேரிசினு சொல்லுற
இதுக்கு பேருதான் முன்னேற்றமா சொல்லு தம்பின்னு அந்த பெரியவர் என்ன பாத்து கேட்டாரு
நா அப்படியே தலை குனிந்து வாய் அடைசி போயிட .....