மழலை
வானத்து நிலவாய் ஜொலிக்கும்
வாசல் நிற்கும் மழலையே ....
நீ!! சிங்கார மலராய் மலர்ந்து ,
சிரிப்பு இதழில் பிறந்து ,
முல்லை அரும்பு உதிரும்பொழுதில்
முத்துமணிச் சிதறும் ....
நீ!! விழிப்பார்வைக்காட்டி ,
விரல் சைகையாட்டி ,
சிரிக்கின்ற உன்அழகுக்கு,
ஈடு இணையில்லை இப்பூமியில் ...
முத்துமணி ரத்தினமும்
முழுமையான நந்தவனம்
உன் பிஞ்சுவிரளுக்கு இணையில்லை ....
நீ!! தத்தித் தாவிடும் அழகோ !!
தங்கரதத்தின் அழகாகும் .....
உன்!!செந்தமிழ் மழலையின் கீதம் ,
செம்மொழி உணர்த்திடும் வேதம்,
இனிக்கும் உன் மழலையின் மொழியாம்
இன்பம் விரும்பும் மனதின் மொழியாகும்.......