பிச்சை
![](https://eluthu.com/images/loading.gif)
பிள்ளைகள் பெற்றால்
பின்னால் உதவும்
பிள்ளையாய் பெற்றால்
பிடி சாதமாவது கிடைக்கும்.
என்றே பெற்றேன்
பிள்ளைகள் இரண்டு
இரண்டுமே எங்கே
என்னை விட்டு பறந்தது.
பிள்ளைகள் இருந்தும்
பிச்சை எடுத்தேன்
பிள்ளைகளின் பாச
பிணைப்புகள் இல்லாததால்.