தாய்மொழி

அறிவாளிகளுக்கு பஞ்சமில்லை
ஐன்ஸ்டீன்களுக்கு பஞ்சம்
கட்டிடங்களுக்கு பஞ்சமில்லை
கற்றவர்களுக்கு பஞ்சம்
புத்தகங்களுக்கு பஞ்சமில்லை
புத்திமான்களுக்கு பஞ்சம்
நூலகங்களுக்கு பஞ்சமில்லை
நியூட்டன்களுக்கு பஞ்சம்

ஏட்டில் வடித்ததில் பஞ்சமில்லை
எட்டி பார்ப்பவர்களுக்கு பஞ்சம்
கொட்டி படிப்போர்க்கு பஞ்சமில்லை
கெட்டிகாரர்களுக்கு பஞ்சம்

ஏழை பிள்ளைக்கு அரசினர் பள்ளி
வசதி படைத்தோன்க்கு பாடச்சாலையே பள்ளி
அறிவாளி பிள்ளைக்கு மொழிதன்னில் பிரச்சனை
மொழி தெரிந்தவனுக்கோ
அறிவியலில் பிரச்சனை

கல்விக்கு தன் மொழியில்லை
கற்பவனுக்கோ வேறுவழியில்லை
மனப்பாடம் செய்கின்றான்
ஏட்டோடே முடிகின்றான்

ஆங்கிலத்தில் படித்தால்
அறிவாளி என்றும்
அரசு தனில் படித்தால்
மரமண்டு என்றும்
எண்ணுவோர் கோடி இங்கு
எங்கனம் வளரும் பின்பு

அறிவு தன்னை வளர்க்க வேண்டும்
அதற்கு நம்மொழியில் படிக்க வேண்டும்
அறிவியலோ அறவியலோ
நம்மொழியில் இருக்க வேண்டும்

அடிமட்ட மாணவரும்
ஆறறிவு உள்ளவரே
நம்மொழியில் பயிற்றுவித்தால்
உலகம் போற்றும் வல்லவரே

கண் போன்ற கல்விதனை
மண்மொழியில் வைத்தாலே
தன்னறிவு பெருகுமடா
தன்னிறைவு அடையுமடா

எழுதியவர் : கவியரசன் (22-Jan-15, 10:39 pm)
Tanglish : thaaimozhi
பார்வை : 169

மேலே