நிலைத்து நிற்கும் அன்பு
ஜாதி அழித்து மதமொழித்து சாதிக்கின்ற
ஜோதியில் மூழ்கி சுகமடைந்து, - நீதி
வழுவா நெறியோடு நிற்கும் தமிழை
தொழுதே வணங்கும் தமிழராய் வாழ்ந்ததன்
கைப்பிடித்து நேர்வழி சென்றே சமத்துவ
வையகத்தை காதலித்து வாழும் நமக்குள்ளே
மெய்யன்பே நிற்கும் நிலைத்து!