நினைப்பது சரியா
(இது ஒரு உண்மைக் கதை) : சுதா ஒரு கிராமத்துப் பெண். தாய் மட்டும் இருக்கிறாள். தந்தை சுதாவின் சிறு வயதிலேயே இறந்து விட்டார். அவள் தான் வீட்டின் செல்லம் நான் எதை கேட்டாலும் என் தாய் கொடுத்து விடுவாள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறாள். சுதாவின் மனதில் காதல் மலர்கிறது.. தன் தாய் மாமாவின் மகனை(கண்ணன்) விரும்புகிறாள். அவனும் சுதாவை விரும்புகிறான். இருவருடைய காதலும் சுதாவின் தாய் மாமாவிற்கு தெரிய வர அவரிடம் கண்ணன் தன் காதலின் ஆழம் புரியும்படி எடுத்துக் கூறினான். அவரும் புரிந்து கொண்டார்.. இருவரும் மகிழ்சியில் திகைக்கிறார்கள். அப்பொழுது சுதாவிற்கு திருமணம் முடித்து வைக்க அவள் தாய் எண்ணுகிறாள். சுதாவிற்கு தெரியாமல் அவளின் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று தந்தை வீட்டார் முன்பு நிச்சயதார்த்தம் நடக்கிறது அவளின் சம்மதம் துளி அளவும் இன்றி. தன் தாய் எதற்காக இப்படி செய்தாள் என்று காரணம் தெரியாமல் தவிக்கிறாள் சுதா.. நடந்த விஷயத்தை முழுதாக தெரிந்திராத கண்ணன் குடித்து விட்டு நடு ரோட்டில் சுதாவை கண்டபடி திட்டி அசிங்கபடுத்துகிறரான்.. இதனால் கோபம் அடைந்த சுதா தன் தாயிடம் காதலை பற்றி எதுவும் பேசாமல் மௌனம் காக்கிறாள். பின்பு கண்ணனும் அவன் தந்தையும் சுதாவின் குடும்பத்தை வெறுத்தனர்.. தன் ஆசையினை மனதில் புதைத்து கொண்டு தாயின் விருப்ப்படி வேறு ஒருவனை மணந்து கொண்டாள்.. கண்ணனின் நினைவுகளை மறந்தாள்.. கணவனுடன் (ராம்) இன்பமான வாழ்க்கையை தொடங்குகிறாள்.. திருமணம் ஆகி மூன்று வருடங்களை கடந்தன.. ஆனால் சுதாவிற்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வில்லை.. தான் ஒருவனை காதலித்து ஏமாற்றி விட்டதால் தனக்கு கிடைத்த தண்டனை என்று நினைக்கிறாள்..
அவள் நினைப்பது சரியா;தவறா