என்னவென்று சொல்வது

"சமையல் தெரியாது"
இதில் நீயடையாத வருத்தம்
எனக்கெதற்கு....

"கெட்ட பழக்கமில்லை"
இதில் நானடையா பெருமை
உனக்கெதற்கு...

"அமைதியா வர வேண்டியதுதானே"
என்றிடும் அண்ணனின் வீரத்தை
எவனிடமோ பேசி வந்ததுதான்
அவமானத்தை தந்தது....

"நேத்து அப்பாவ வேறொருத்தங்ககூட...."
இதுவரை மறைத்திருந்ததையே
தோழியுமுரைக்க கேட்டிருந்தவளும்
அம்மாவென்று அழாமல்
சொல்லி சென்றாள்....

"எவ்ளோ படிச்சென்ன..
குக்கர்தானே கழுவ போற..."
கேலிகளை நவீனமாக்கியது
படித்த பட்டங்கள்...

எழுதியவர் : மணிமேகலை (25-Jan-15, 10:29 am)
பார்வை : 231

மேலே