அம்மா உனக்காக
அம்மா...
கருவரையில் நான் ரசித்த முதல் இசை,
உன் இதயதுடிப்பு..!
நான் பிறக்கும் முன்பே உனக்கு சுமையகிபோனேனோ,
என்று அழத்தோன்றியது,
அழுதுவிட்டேன் பிறந்தவுடன்,
நோயாளிகள் வந்து செல்லும் மருத்துவமனைக்கு,
உன்னை வரவளைத்தற்காக..!!!
ம்ம்ம்... அழுதுவிட்டேன் நமக்கான,
தொப்பல் கொடி அருபட்டதற்காக...!!!
உன் இதயம் அருகே உண்டதால் தானோ,
தாய்ப்பால் அத்தனை சுவையானது....!!!!
நான் பசியால் அழுதாலும்,
வலியால் அழுதாலும்,
முதலில் உணர்வது, நீ மட்டும் தான்,
பின்பு மருத்துவர்கள் எனக்கு எதற்கு..??
அழக அழகா எனக்கு ஆடை அணிவித்தாய்,
யாரும் நான் ஆணா பெண்ணா,
என்று விளங்க வண்ணம்,
ஆக்கிவிட்டாய்...!!!
நானும் அழகிய தமிழ் பேச,
கற்றுகொடுத்தாய்...!
என் மெல்லிய கரங்களை பிடித்தே,
எனக்கு நடை கொடுத்தாய்...!!!!
எனை என்ன பெயர் சொல்லி,
அழைப்பது என்றாய்,
ம்ம்..
எனகொன்றும் குழப்பமில்லை, ஏனென்றால் ?
நான் உன்னை அழைக்கபோவது,
அம்மா....
என்று மட்டுமதானே.....!!!
அம்மா உன் இடுப்பு ஏன்னும்,
சிம்மாசனம் என்னக்காக இருக்க.!!!
ஒவ்வொரு பயணத்தின் போதும்,
நான் அடுத்தவர் மடியில் அமர்ந்தது எதற்கு???
எனக்கு என்ன வேண்டும் என்றே,
நீனைவுகளை கொண்ட உனக்கு.......
உனக்கு என்ன வேண்டும் என்றே,
கேளாத பாவியாகி போனேனே......
இப்படிக்கு
உனக்காக உன் பிள்ளை
ர.கோவர்த்தனன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
