அம்மாவுக்கு

ஈடாகுமோ
ஈர் உலகத்து செல்வங்களெல்லாம்
ஈன்றெடுத்த என் அன்னையின் முன்பு..

இருப்பது அவளுக்கு
அழகிய இதயம்,
அளாவிய இரக்கம்..
அதனால் தான்,
கருவில் என்
கால்கள் உதைக்கையில்
உதைப்பது என் சிங்கக்குட்டி என கூறி,
உரிமையில் சிரித்தாள்...

கடவுள் இருப்பது உண்மை
கண்முன்னே தாயிருக்க..
மண்ணுலக மந்திரங்களெல்லாம் பொய்
அம்மா எனும் சொல்லிருக்க...

குருதியை சுருக்கி
உணவை கொடுத்தவள்,
கருவறை கொண்டு
உருவம் கொடுத்தவள்..

மார் சாய்த்து
பார் காட்டியவள்..
உறக்கம் தவிர்த்தவள்..
உலகம் மறந்தவள்..

இவையெல்லாம் எனக்காக..

இன்று

அம்மா..

வரம் ஒன்று கொடு
வரும் ஜென்மத்தில்
உன்னை நான் தாலாட்ட..
ஒய்யாரமாய் என் மடியில்
நீ
தூங்க..

அள்ளி என் அன்னையை அன்பாய் கொஞ்ச
அவளே என் மகளாக...

எழுதியவர் : முருகேசன் சத்தியமூர்த்தி (30-Jan-15, 11:59 am)
Tanglish : ammavuku
பார்வை : 134

மேலே