முடிவோ இதுவும்

நினைவுகள் முழுவதும் ஆக்கிரமித்து விட்டான்
நினைக்கவும் கூட இல்லை அவன் பொறிகளுக்கு அகப்படுவேன் என்றே !!
சரளமாய் பேசினான் , சிரிக்க வைத்தான் …
சதிகாரன் .. உடன் விலங்கும் போட்டு விட்டான் சிந்தை அறியாமலே !!

மாட்டியது உறுதியா ?? மனதிடம் கேட்டேன் ..
மாயாவி அவளோ .. இன்னும் மயக்கிவிட்டாள் மதியையும் !!

கனாக்கள் பல காண்கிறேன் , உறக்கம் கெடுத்தே!
வினாக்கள் பல கேட்கிறேன் .. விடை அறிந்தும் , மாற்ற முயன்றே !!

கண்கொட்டாமல் ரசிக்கிறேன் அவன் உருவ சித்திரத்தையும், ..
பன்முறை பிதற்றுகிறேன் அவன் ஜெப நாமத்தையும்,
என் செய்வதென்று திகைக்கிறேன் .. அடுத்தது அறியாமலே !!!

பிடிக்குமா என கேட்டால் –ரொம்பவே என்கிறான்
பழகியது சிலநாள் தானே என்றால் ..
போதும் அதுவே உன்னை அறிய என்கிறான் !!

சரி கனவுகள் வளர்க்கவா .. எதிர்காலம் எதிர்நோக்கியே ,என்றால் .
பறக்காதே .நான் கட்டுண்டிருக்கிறேன் பல காரணிகளால் என்கிறான் !!
முடிவாய் ……………

முடியவில்லை இம்மனநிலையின் தொடரும் தொல்லைகளும் ..
முடித்து கொள்கிறேன் எல்லாவற்றையும் … வேண்டாம் வலிகள் என்றே !!

எழுதியவர் : ஷிவிரா !! (31-Jan-15, 5:22 pm)
சேர்த்தது : mahakrish
பார்வை : 49

மேலே