நானும் என்னவளும் -1

என்னைப்பார்த்து
இப்போதெல்லாம்
ஏன் கவிதை
எழுதுவதில்லை ?
என்று கேட்டாள்
என்னவள் ....
கவிதையைப் பார்த்துக்
கவிதை எழுதினால் - அது
காப்பியடித்தது போலாகும் ...
எனக்குக் காப்பியடிக்கும்பழக்கம்
இதுவரை இல்லைஎன்று
கவிதையாகக் கூறினேன்...
அது கேட்டு -
அவள் புன்னகைத்தாள்...
அந்தப்புன்னகை
ஆயரம்பேர் கைதட்டியது
போலிருந்தது....