ஆதலினால் காதல் செய்வீர்

காதல் என்னும் இனிமையை
காத்திருந்து பெறுவதில்லை - யாரும்
காத்திருக்காமல் கிடைப்பதால்
காதலின் அருமை புரிவதில்லை .
பார்த்தவுடன் வந்து பாலினை ஈர்ப்பதல்ல
பழகிய பின் புரிந்துணர்வதே- காதல்
பிரிவதற்காக சேர்ந்ததல்ல
பிறரின் நல்லாசியை பெறுவதற்காக சேர்ந்ததே .
காதலை எதிர்க்கும் போது வலிக்கும்
கபடமற்ற உள்ளம் - ஏனோ
கள்வனைக்கண்ட தனியன் போல்
காலம் கடந்த பின் மாறுகிறதோ.
காதலுடன் இணைந்த உள்ளம்
காலம் கனிந்த பின் காரணமாய்
வெறுப்பதனாலோ இன்னும்
ஆதலினால் காதல் செய்கிறார்கள்......

எழுதியவர் : யக்சனா - சோதீஸ்வரன் (1-Feb-15, 4:48 pm)
பார்வை : 101

மேலே