நெஞ்சு பொறுக்குதில்லையே
நெஞ்சு பொறுக்குதில்லையே தமிழா நின்
நிலைகண்டு நெஞ்சு பொறுக்குதில்லையே !
பிஞ்சும் பிணமாகிப்போன போன வேளையிலே
பஞ்சனை மீது படுத்து வஞ்சகமாய் நடித்தாயே
உண்ணா விரதமென்று கணப்பொழுதில் கலைத்தாயே
உன்னையும் தலைவனென பின்தொடரும்
தரம் கெட்ட தமிழனின் நிலைகண்டு
நெஞ்சு பொறுக்குதில்லையே !
ஈழத்தில் பிறந்திருதால் புலியென பாய்ந்திருபான்/ள்
எதிரிகளின் சிரம் கொய்து ஈகை எய்திருப்பான்/ள்
இங்கே கோழைகளின் கூடில் அகப்பட்டு
அங்கே உறவுகளின் உயிரை காக்க முடியாததை
எண்ணி எண்ணி தன்னை மாய்த்துக்கொண்டவன்/ள்
நிலை கண்டு நெஞ்சு பொறுக்குதில்லையே !
சாதி மத சாயங்களை பூசிக்கொண்டு
சளைக்காமல் அதை காக்க அடித்துக்கொண்டு
ஈழ இனஅழிவு வர கண்கட்டி கொண்டு
எங்கோ எவனுக்கோ நிகழ்வதைபோல்
வாழ்த்ந்து வரும் வீரம் செத்துப்போன
வித்தில் பிறந்த கோழைத் தமிழனை
கண்டு நெஞ்சு பொறுக்குதில்லையே
நெஞ்சு பொறுக்குதில்லையே !