மண் பயனுற வேண்டும்
எம் மண்ணும் என் மக்களும்
*****************************************
எம் மண்,பயனுற வேண்டும்
என் மக்கள் மேம்பட வேண்டும்.
சுதந்திரம் பெற்றிட்டபோதும்
சுகபடவில்லை என் மக்கள்.
வெள்ளையர் வெளி சென்றபோதும்
கொள்ளையர் கொட்டகை இங்கே.
காடுகள் களைந்தனர் மண்ணில்
காலமழையை சிதைத்தனர். பாரில்
ஆற்றினை அரித்தனர் அதில்
ஆழ்துளையிட்டு உறிஞ்சினர்.
கனிமமும் தனிமமும்
களவாடி விற்றனர்.
விளைநிலம் அழித்தனர் ஏனோ
விளைவுபற்றி மறந்ததால்தானோ
ஆலைகள் குவித்தனர் மண்ணில்
காற்றினை கெடுத்தனர் விண்ணில்
மலைகளை மாய்த்தனர்
மாற்றானிடம் துலைத்தனர்.
இலவசம் கொடுத்தே
சிந்திக்க தடுத்தனர்.