உன் மெட்டி நானடி ……
முதல் முறை வலிக்குதே - என்
மூச்சுக்காற்றும் திணறுதே
நீயின்றி உறங்கும் அறைகூட
நீயாரென்று கேட்குதே
உனைக் காணாத கண்களும்
உயிரோடு தீக்குளிக்குதே
தாயின்றி தவிக்கும் குழந்தைப் போல
தவிக்க விட்டு சென்றாயடி
உன் முகம் பதிந்த வீட்டில்
எங்கு பார்த்தாலும் சுவரே
இருப்பது போல் தெரியுதே
உன் பாதத்தை கையோடு தான்
அணைத்த என் கைகளும்
கவனிக்க ஆளின்றி தவிக்குதே
உன் இதழ் ரோஜாவின்றி
என் கண்ணங்களும் வறண்டு போனதடி
உடையாத உன் கண்ணாடி வளையல்கள்யின்றி
நம் காதல் மெத்தையும்
கனவின்றி தவிக்குதடி
உன் கொலுசு ஓசையை கேட்காமல்
என் செவிகளும் கேட்கும்
திறனை இழக்குதடி
உன் கூந்தல் வாசனையை நுகராமல்
என் சுவாமும் திசையின்றி
நம் காதல் பரிசைப் பெற்றெடுத்து
சுகமோடு திரும்பி வர
தினமும் குட்டிப் போட்ட பூனைப் போல்
சுற்றிச் சுற்றி வந்து
உன் நினைவோடு வாழும்
உன் மெட்டி நானடி ……!