ஆகையினால் காதல் செய்வீர் - மண் பயனுற வேண்டு போட்டிக் கவிதை
காதலித்துப் பார்;காதல் புரியும்,
நான் அனல் பட்ட மெழுகாய் உன்னால்,
நீ எனை உருக்கும் உயிராய் என்னுள்,
எனை உருகி உருகி ஓடவிடு
நீ விலகினால் நான் உறைந்து விட ;
மண்ணோடு ஊன்றும் விதையாய்
காற்றின் திசை கொள்ளும் சருகாய்
கரை தொட்டு மீளும் அலையாய்
உன்னோடு என் காதல் தவமே.
தொலைந்து விட்டதென
தூரப்போனாலும் தொடர்ந்து வரும்
நினைவுகள் காதல்.
பிரிந்து விட்டதெனப்
பிளவுபட்டாலும் பிடித்தாட்டும்
பிம்பங்கள் காதல்.
இறந்து விட்டதென
இதயம் மறந்தாலும் மீண்டுவரும்
பீனிக்ஸ் காதல்.
காதலித்துப் பார்;வாழ்வே நிறையும்.
ஆகையினால் காதல் செய்.