நெஞ்சு பொறுக்குதிலையே மண் பயனுற வேண்டும் கவிதைப்போட்டி 2015

வேலைக் கேற்ற கூலியைத் தராதவர் ஆங்கோர்
நேரிழை கண்டதும் நேத்திரம் துடிப்பவர்- நெடுஞ்
சாலைதொறும் பெண் தேடித் திரிபவர் நேய
வாலாட்டும் வஞ்சக நாய்களைக் காண்கையில்;

சுத்தனைப் போலங்கத்தில் சுகந்தம் தெளித்து
எத்தர் பலரும் பயணிக்கும் பேருந்தில்-பருவ
சித்தெனப் பின்புற மேனியைத் தடவிடும் அவ்
வுத்தமர் கன்னம் வீங்காமல் விடுகையில்

தக்கவர் கோலத்தில் வெள்ளை யுடுத்தி ஊரில்
பக்குவத் தேர்தல் பயிரினை அறுத்து- உடன்
வக்கனைப் பேசி வள்ளலாய் நடித்துப் பொருள்
சிக்கனம் செய்பவர் சபதம் கேட்கையில்

ஆதார அட்டைக்கும் அரிசிக்கும் பருப்புக்கும்
பாதங்கள் நோகவே வரிசையிலே இருக்க ஆங்கே
சாதனை வீரராய் முண்டி முந்தியே அனைவர்க்கும்
பாதகம் செய்பவர் பரிசுடன் செல்கையில்

மாதா உதரத்தில் சலமலம் மிகுந்ததில் உலகில்
சாதரண பெண் ஆணாய் பிறவாமல்-வெறும்
யாதனை மட்டுமே யாண்டிங்கு பெற்றிடும் சோக
வானிதையர் மீது வழூச் சொல் சொல்கையில்

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ் (7-Feb-15, 7:44 am)
பார்வை : 124

மேலே