நம் தேசம் போற்றுவோம் வளர்ப்போம் மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி
நான் சுயநலவாதிங்க!
நான் நல்லா இருக்கணும். அவ்வளவுதான்!
4 கே டிவி, மல்டிபிளக்ஸனு சினிமா வசதியா பார்க்கணும்.
4ஜி இன்டர்நெட், ஆடி, பி எம் டபிள்யுனு அசத்தணும்!
மாலுக்குப் போனா, ரக ரகமான கடைகளும் ,
எல்லா மத கஸ்டமர்களும் கலாய்க்கணும்!
ரோடெல்லாம் சூப்பரா இருக்கணும்!
பிச்சைக்காரன், வெத்துவேட்டு இல்லாமல்
ஊரெல்லாம் சுத்தமா, அங்கங்க பாத்ரூமோட
அமெரிக்காகாரனே வாய பொளக்கணும்!
எங்க, உங்க வீட்டு பொண்ணுங்க பயமில்லாம
எங்க வேணா எப்ப வேணா சுத்தணும்!
லஞ்சம்னா என்னன்னு நாடே மறந்தறனும்!
எல்லாப் பொருளும் இங்கேயே செய்யணும்!
அயல்நாட்டுக்கெல்லாம் சரக்கு அனுப்பனும்!
ஒரு டாலர் அஞ்சு ரூபாய்தான்னு இறங்கணும்!
ஆமாங்க! நான் சுயநலவாதிதாங்க!
நாடு ஓஹோனு இருந்தால்தானே
நான் நல்லா இருப்பேன்! நீங்களுந்தான்!
பாடு படலாம், வாங்க! ஜெய் ஹிந்த்!