பிரம்மனுக்கு ஒரு சவால் - இதோ விடுகிறான் எனது அயல் தேசத்து சகோதரன்

கைகளும் கால்களும் எனக்கில்லை
கவலையும் இல்லை என்றே நீ
கருத்தை வலைத்தளத்தில் சொன்னாயே
கடவுள் உருவில் மனிதனோ நீ......?!
ஹே....ராமா என்று நான் அழைப்பதை விட
ஹே...நிக் வியூஜிசிக் என்றே இனி அழைப்பேன் ...!!
( நிக் வியூஜிசிக் தானே தலைவா உன் பெயர் ? )
பூரண உடலை பெற்றிருந்தும் நான்
புத்தி கெட்டே அலைகின்றேன் அது
பூத உடலாகும் எனத் தெரிந்தும் - சின்னஞ்சிறு
பூரிப்பில் அமிழ்ந்து தொலைகின்றேன்.....!
ஆடை இல்லாதவன் அரை மனிதன் என்றால்
அறிவே இல்லாதவனை எந்த வகையில் சேர்க்க ?!
அரை மனிதன் இல்லை நண்பனே நீ - ஆற்றியே
உரைகளே இனி நான் பின் பற்ற மறைகள் அப்பா....!!
இன்னும் சொல்லிக் கொடு எனக்கு - நீ
இந்த வாழ்க்கையை ரசிக்க கற்றுக் கொடு...!!
மனதில் குறை உள்ள மனிதர் அனைவரையும்
மன்னவா இந்த மண்ணில் நீ தேற்றி விடு...!!
தேசம் கடந்து பிறந்த என் உயிரே இந்த
பாரத சகோதரனின் பாசத்தை ஏற்றுக் கொள்...!!
நீ அழ மாட்டாய் எனக்குத் தெரியும்.....
ஆனால்
என் கண்கள் கலங்குகிறதே.....
என்னை தேற்றடா கொஞ்சம்.........
எனை தேற்றி விடு கொஞ்சம்.......