அளித்திடு ஒரு வரம்

கொஞ்சி கொஞ்சி பேசிடும்
அவள் குரல் எங்கே...!
பேசிடும் வேளையில்
பூத்திடும் சிரிப்புக்கள் எங்கே...!
அள்ளி வீசிடும்
காதல் மொழி எங்கே...!!!

கடவுளே...
உனக்கு நான் செய்த
பாவம் தான் என்ன...?
உன்னிடம் நான் வேண்டிடும்
என் வாழ்வின் சந்தோசம்
என்னவளின் உற்சாகமே...!!!

உடல் நலமின்றி அவள்
பட்டிடும் அவஸ்தையில்
இங்கு என்னுயிர் தவிக்கின்றதே
அப்பிடி உனக்கென்ன சந்தோசம்
என்னவளின் உடல் வதைத்து
என்னுயிர் குடிப்பதில்...!!!

கொஞ்சிடும் அவள் குரல்
இன்று கெஞ்சுகையில்
என்னுயிரும் மடிகின்றதே...!
அவள் தலை கோதி
என்மடியில் உறங்கவைக்க
என்மனசும் தவிக்கின்றதே...!

இறைவா...!!!
என்னவளின் கொஞ்சிடும்
மொழிதனை கேட்டிடவேண்டும்...!
அவள் துள்ளி குத்தித்துடும்
அழகை ரசித்திடவேண்டும்...!
இன்றே வரம் அளித்திடு
இல்லையேல் உன்னை அழித்திடு...!!!

எழுதியவர் : விக்கிரமவாசன் வாசன் (11-Feb-15, 5:15 am)
பார்வை : 115
மேலே